நியூஸ்பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம் – பொறுமைக்கு எல்லையுண்டு

நியூஸ்பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம் – பொறுமைக்கு எல்லையுண்டு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2016 | 8:41 pm

நாட்டின் பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் முக்கிய சம்பவங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை ஆசிரியர் தலையங்கம் ஊடாக பத்திரிகைகள் நாட்டிற்கு வெளிப்படுத்துகின்றன.

நாட்டின் நிகழ்கால விடயங்களின் நிலை தொடர்பில் கவனம் செலுத்தி ஊழல் மோசடிகள் காரணமாக மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்கும் நோக்கில் இன்று முதல் நியூஸ்பெஸ்ட்டின் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் முன்வைப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

இன்று தொடக்கம் பிரதி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் பிரதான செய்திகளின் ஊடாக நியூஸ்பெஸ்ட் ஆசிரியர் தலையங்கத்தை சமர்ப்பிக்க நாம் தயாராகவுள்ளோம்.

பொறுமைக்கும் எல்லையுண்டு…..

‘ஊழல்’ 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் அதிகளவில் பிரயோகிக்கப்பட்ட ஒரு சொல்லாகும்.

சிறந்த இலங்கையை உருவாக்கும் நோக்கிலும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இது அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.

நாட்டு மக்களுக்கு தெரிவித்த விடயங்கள் மற்றும் அவர்களுக்கு வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் அவர்கள் நம்பிக்கை வைத்தனர். அதன் காரணமாக அவர்கள் தங்களின் வாக்கினை அளித்தனர்.

மக்கள் வாக்கினை பயன்படுத்தியது தனிநபர்களுக்கு என்பது நிதர்சனம் எனினும் உண்மையிலேயே எதற்காக அவர்கள் வாக்களித்தார்கள்.

அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக அரசியல்வாதிகளால் தாம் உபயோகப்படுத்தப்படுவதற்கு எதிராகவும்,நாட்டு மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது தமக்காக அரசியல்வாதிகள் சொத்து சேகரித்துக் கொள்வதற்கு எதிராகவும்,நிறைவேறாத வாக்குறுதிகள் மற்றும் பல தசாப்தங்களாக நீடிக்கும் வறுமைக்கு எதிராகவும் மக்கள் தமது வாக்குகளை அளித்தனர்.

மாற்றம் ஒன்றிற்காக அவர்கள் வாக்களித்தார்கள். குறிப்பாக ஊழலுக்கு எதிராக அவர்கள் தமது வாக்கினை பயன்படுத்தினார்கள்.

ஒரு மனிதர் ஊழலுக்கு எதிராக முன்னோக்கி வந்து தன்னுடன் இணைந்து நிற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மக்கள் அந்த அழைப்பை ஏற்றனர்.

அந்த மனிதரின் முயற்சியை மற்றும் புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் வழங்கிய ஆணை என்பவற்றை புறந்தள்ளி சிலர் செயற்படுகின்றனர்.

இறுமாப்புடனும், எவருக்கும் கட்டுப்படாத தன்மையுடனும் அவர்கள் தமது ஆட்சியை முன்னெடுத்து வருகின்றனர்.

தினந்தோறும் மக்கள் அனுபவிக்கும் துன்பியல் அவர்களுக்கு புலப்படாத அதேசமயம் அது தொடர்பில் கவனம் செலுத்தவும் அவர்கள் தயாரில்லை.

வறுமையுடனும் பட்டினியுடனும் வாழ்நாளை கழிக்கும் மக்கள் கூலி வேலை செய்யும் தொழிலுக்கு மேலதிகமாக பிறிதொரு தொழில் குறித்து கனவு காண்பதற்கு கூட அஞ்சுகின்றனர்.

எமது தாய்மார் மற்றும் சகோதரிகளை வெளிநாட்டுக்கு அனுப்புதல், எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அப்பட்டமாக பகல்கொள்ளையிடுவது போன்றுள்ளது. இது அவர்களுக்கு தென்படுவதில்லை.

இதுதான் இன்றைய நிலமை.

பல தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலர் தமது திறமையால் அன்றி ஜனாநாயக வழிமுறைகள் காரணமாக இன்று அதிகாரங்களைப் பெற்றுள்ளனர்.

தமது அரசியல் கபடத்தனங்களால் தமது கட்சி வலுவிழக்கும் சமயங்களில் அதிகாரத்தை தக்க வைக்க முயற்சித்த தலைவர்கள் அந்த முறைமையை உபயோகித்து ஆட்சியை தக்கவைக்கவும் முயற்சி செய்கின்றனர்.

இன்று அவர்கள் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமின்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அவர்கள் தமது அரசியல் பலத்தை மட்டுமன்றி மக்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளனர்.

ஆம்…. அரசியல் நிலைகள் மாறுபடுவதுண்டு, சிறப்புரிமைகளை வழங்கும் அரசியல், அச்சமூட்டும் அரசியல், அராஜக அரசியல் மற்றும் ஊழல் அரசியல் என்பன முடிந்துவிடும்.

எனினும் எமது தலைவர்களுக்கு இதனை விளங்கிக் கொள்ளும் சக்தி இல்லையா? என்ற கேள்வி எழுகின்றது.

உண்மையில் இது அவர்களுக்கு விளங்கவில்லையா, அல்லது அவர்கள் குருடர்களா? அவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனரா?

எமது எழில்மிகு தாய் நாட்டுக்காக இந்த ஊழல் மற்றும் மோசடி மிகு அரசியல்வாதிகள் பதவி விலகவேண்டும். அவர்கள் வீடு செல்ல வேண்டும்.

தன்மானம் இருக்கும் எனின் நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்து புதிய தலைமுறையினரிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

எமது தேசம் இரத்த சிந்தியது போதும்..

நாம் பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் எதிர்நோக்கினோம்.

அதுபோதும். பொறுமைக்கும் எல்லையுண்டு…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்