யாழ். மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம்

யாழ். மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம்

யாழ். மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம்

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2016 | 3:42 pm

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த சம்பவத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை மிகவும் கண்டனத்திற்கு உரியது எனவும் இது இலங்கை வாழ் தமிழர்களுக்கு அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை அரசுடன் இந்திய மத்திய அரசாங்கம் தொடர்பு கொண்டு இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்