“முஸ்லிம் சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொண்டால் ஜீ.எஸ்.பி சலுகை தருகிறோம் என்று கூறவில்லை”

“முஸ்லிம் சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொண்டால் ஜீ.எஸ்.பி சலுகை தருகிறோம் என்று கூறவில்லை”

“முஸ்லிம் சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொண்டால் ஜீ.எஸ்.பி சலுகை தருகிறோம் என்று கூறவில்லை”

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2016 | 10:15 pm

தெவட்டஹா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மற்றும் அசாத் சாலி
ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அசாத் சாலி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

[quote]நேற்று அரசாங்கத்தினால் ஒரு பிரேணையை முன்வைத்தார்கள். முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தத்தினை ஏற்படுத்தினால் தான் ஐரேப்பிய ஒன்றியத்தினால் எங்களுக்கு ஜீ.எஸ்.பி வழங்குவார்களாம். இந்த நாட்டில் ஜீ.எஸ்.பி சலுகையை இல்லாது செய்தது மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் செய்த அநியாயங்களுக்காக. நானும் ஜனாதிபதியுடன் இங்கிலாந்து போயிருந்த நேரம், பிரதம மந்திரி சொன்னார் ஜீ.எஸ்.பி சலுகை தருகிறோம் என்று. அவர் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தத்தினை ஏற்படுத்திக்கொண்டு வாருங்கள், ஜீ.எஸ்.பி சலுகை தருகிறோம் என்று கூறவில்லை.[/quote]

என குறிப்பிட்டார்.

மேலும், இந்த அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் சொல்வதற்கு ஏற்ப செயற்படுவதாகவும் இஸ்ரேலுடன் சேர்ந்து செயற்படுகின்றதா என்ற சந்தேகம் தமக்குள்ளதாகவும் அசாத் சாலி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்