மடகாஸ்கரில் கடும் வரட்சி: பசியால் 1.5 மில்லியன் மக்கள் அவதி

மடகாஸ்கரில் கடும் வரட்சி: பசியால் 1.5 மில்லியன் மக்கள் அவதி

மடகாஸ்கரில் கடும் வரட்சி: பசியால் 1.5 மில்லியன் மக்கள் அவதி

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2016 | 4:13 pm

தெற்கு மடகாஸ்கரில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக சுமார் 1.5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எல் நினோ காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் மடகாஸ்கரில் வரட்சி ஏற்பட்டுள்ளது.

அங்கு பிரதான பயிராகத் திகழும் சோளத்தின் விளைச்சலும் இம்முறை பாரியளவில் குறைவடைந்துள்ளது.

கிடைக்கும் விதைகளை உண்டும் தங்கள் விவசாய உபகரணங்கள், விலங்குகளை விற்றும் அங்குள்ள மக்கள் தமது பசியை சமாளித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்