புத்தளம் ரயில் மாரக்கத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது

புத்தளம் ரயில் மாரக்கத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது

புத்தளம் ரயில் மாரக்கத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2016 | 9:30 am

இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை புத்தளம் ரயில் மாரக்கத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க ரயில் நிலையத்திற்கும் நீர்கொழும்பு ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் புனரமைப்புப் பணிகள் மெற்கொள்ளப்படுகின்றமையினாலேயே புத்தளம் ரயில் மாரக்கத்தின் ஒரு பகுதி மூடப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் கூறியுள்ளது.

இதற்கமைய இன்று காலை 9.45 தொடக்கம் எதிரவரும் 31 ஆம் திகதி காலை 5 மணிவரை குறித்த ரயில் மாரக்கம் மூடப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த நாட்களில் கோட்டையிலிருந்து சீதுவை, சீதுவையிலிருந்து கோட்டை வரை வழமை போல் ரயில் போக்குவரத்து நடைபெறும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு சிலாபத்தில் இருந்து நீர்கொழும்பு , நீர்கொழும்பிலிருந்து சிலாபம் வரையிலான ரயில் போக்குவரத்து புதிய நேர அட்டவணையின் படி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்