கோப் குழு அறிக்கை: பிரதமரின் விளக்கமும் ஏனையோரின் விமர்சனங்களும்

கோப் குழு அறிக்கை: பிரதமரின் விளக்கமும் ஏனையோரின் விமர்சனங்களும்

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2016 | 10:11 pm

அர்ஜூன் மகேந்திரன் நாட்டில் இருந்து வெளியேறியமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, அர்ஜூன் மகேந்திரன் திருமண வைபவமொன்றில் கலந்துகொள்ள வெளிநாடு சென்று வருவதாக தன்னிடம் கூறியதாகவும் உதயங்க வீரதுங்க போன்று அவர் தப்பியோடவில்லை என்றும் பிரதமர் விளக்கமளித்தார்.

கோப் குழுவின் அறிக்கையை சுனில் ஹந்துன்நெத்தி முன்வைத்ததன் பின்னர் பிரதமர் அது குறித்து கருத்துத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…

பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்த கருத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.

காணொளியில் காண்க…

 

கோப் குழுவின் அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையொப்பமிடவில்லை என பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டது.

எவ்வாறாயினும், தாம் ஜப்பானில் இருந்து நேற்று அதிகாலையே நாட்டை வந்தடைந்ததாகவும் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது பூரண அனுமதியை வழங்குவதாகக் குறிப்பிட்டதாகவும் ரஞ்சன் ராமநாயக்க விளக்கமளித்தார்.

கோப் குழுவில் இடம்பெறும் விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியாது எனவும் ஊடக நிறுவனங்கள் இது பற்றி தகவல் வெளியிட்டமை தொடர்பில் அவர்களை கோப் குழுவிற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் இந்த கருத்திற்கு பலர் இன்று பதிலளித்தனர்.

காணொளியில் காண்க….

இதேவேளை, கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

காணொளியில் காண்க…

அர்ஜூன் மகேந்திரனின் நிலைப்பாட்டை அறியும் நோக்கில் முயற்சித்த போதிலும், அவர் வெளிநாடு சென்றுள்ளமையால் அந்த முயற்சி கைகூடவில்லை.

இது தொடர்பான அவரது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை நியூஸ்பெஸ்ட் வழங்குவதற்குத் தயாராகவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்