கோப் குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

கோப் குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

கோப் குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2016 | 9:16 am

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் கோப் குழு கடந்த 18 மாதங்களாக மேற்கொண்ட ஆய்வறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற வரலாற்றில் முன்வைக்கப்படும் பாரிய அறிக்கை இதுவென கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிரான சிறந்ததொரு வெற்றியாக இந்த அறிக்கையை கருத இயலும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று இந்த அறிக்கைய சமர்ப்பித்தாலும் இதற்கான விவாதத்தை இந்த வருடத்திற்குள் நடாத்த முடியாமலிருக்கும் என கோப் குழு உறுப்பினர் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க கூறினார்.

அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30க்கு கூடவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்