ஔடதங்களின் விலை குறைப்பின் பயனை மக்கள் பெற்றுக்கொள்கின்றனரா என்பது தொடர்பில் ஆராய்வு

ஔடதங்களின் விலை குறைப்பின் பயனை மக்கள் பெற்றுக்கொள்கின்றனரா என்பது தொடர்பில் ஆராய்வு

ஔடதங்களின் விலை குறைப்பின் பயனை மக்கள் பெற்றுக்கொள்கின்றனரா என்பது தொடர்பில் ஆராய்வு

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2016 | 10:07 am

48 வகையான ஔடதங்களின் விலை குறைப்பின் பயனை பொதுமக்கள் பெற்றுக்கொள்கின்றனரா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வகையில் சில ஔடதங்களின் விலை குறைக்கப்படவில்லை என பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஔடதங்களின் தரம் மற்றும் விலை தொடர்பான தரவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்று தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையினூடான நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஔடதங்களை மறைத்து வைத்து அவற்றிற்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான சுற்றிவளைப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்