எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஸ்மார்ட் ரோபோ

எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஸ்மார்ட் ரோபோ

எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஸ்மார்ட் ரோபோ

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2016 | 12:08 pm

எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்கள் எழுந்து நடப்பதற்கு உதவும் புதிய ரோபோ ஒன்றினை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

சீனாவின் பெய்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் டென்மார்க்கில் உள்ள அல்போர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இத்தகைய புதிய வகை ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

பக்கவாதம், முழங்கால் மூட்டு பாதிப்பு மற்றும் தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படும் நோயாளிகளுக்கு நடக்க இந்த ரோபோ உதவி செய்யும்.

இந்த ரோபோவை முழங்காலில் அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ மூலம் இயற்கையான முழங்கால் அசைவுகளை ஏற்படுத்தி நடக்க முடியாதவர்கள் யார் உதவியும் இல்லாமல் எழுந்து நிற்க மட்டுமின்றி, நடக்கவும் உதவி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடக்க முடியாதவர்கள் நடை பயிற்சி செய்யவும் இது பயன்படுகிறது இந்த ரோபோக்கள் இடுப்புக்கு கீழே அணிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி சென் கூறுகையில், ‘மூளையில் உள்ள நரம்புகள் தான் முதுகுத்தண்டுவட நரம்புகளுக்கு நடக்கும் அசைவுகளை அனுப்புகிறது. இவ்விதமாக மூளைக்கு அனுப்பபடும் தகவல்களை ரோபோ உள்வாங்கி கால்களுக்கு அசைவுகளை உண்டு பண்ணுகிறது. இதன் மூலம் நோயாளிகள் எளிதாக நடக்கின்றனர்’ என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்