மக்களின் பணத்தை மோசடி செய்தவர் நாட்டிலிருந்து தப்பிக்க இடமளிக்கக்கூடாது: அனுரகுமார திசாநாயக்க

மக்களின் பணத்தை மோசடி செய்தவர் நாட்டிலிருந்து தப்பிக்க இடமளிக்கக்கூடாது: அனுரகுமார திசாநாயக்க

மக்களின் பணத்தை மோசடி செய்தவர் நாட்டிலிருந்து தப்பிக்க இடமளிக்கக்கூடாது: அனுரகுமார திசாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2016 | 5:43 pm

மக்களின் பணத்தை மோசடி செய்த நபர்கள் நாட்டில் இருந்து தப்பிச்செல்ல இடமளிக்கக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இன்று பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அனுரகுமார திசாநாயக்க இதனைக் கூறினார்.

இதேவேளை, மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கை நாளை (28) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டில் இருந்து வெளியேறியமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என ஊழலுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்