முறிகள் விநியோக திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோப் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது

முறிகள் விநியோக திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோப் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது

முறிகள் விநியோக திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோப் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 11:49 am

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் கோப் குழுவின் தலைவரினால் சமர்பிக்கப்பட்டுள்ள சட்ட மூலம் தொடர்பில் அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு கோப் குழு இன்று கூடவுள்ளது .

கோப் குழுவின் தலைவர்,பாராளுமன்ற உறுபப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி ஊடாக நேற்று முன் தினம் சமர்பிக்கப்பட்ட சட்ட மூலத்திற்கு பலர் அனுமதி வழங்கினர்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியை பிரநிதித்துவப்படுத்தும் சில உறுப்பினர்கள் இந்த சட்ட மூலம் தொடர்பில் திருத்தங்கள் முன்வைத்தனர்.

குறித்த சரத்தை திருத்தத்திற்குள்ளாக்கி புதிய அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கோப் குழுவின் உறுப்பினர் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார் .

இதன் காரணமாக மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான கோப் குழுவின சட்ட மூலத்தை நாளை பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியாமல் போகும் என பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

கோப் குழுவின் அறிக்கை தயாரிப்பதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்