மட்டக்குளி துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

மட்டக்குளி துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 2:38 pm

மட்டக்குளி சமிட்புர பகுதியில் நேற்று நால்வர் கொலை செய்யப்டப்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களை கைதுசெய்வதற்கு சில பொலிஸ் குழுக்கள் செயற்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மைதானத்திலிருந்து ‘சூட்டி உக்குன்’ எனப்படும் ருவன் சஞ்சீவ உள்ளிட்ட நால்வரும் மேலும் சிலரும் புதியரக காரொன்றிலும் முச்சக்கர வண்டியொன்றிலும் மோட்டார் சைக்கிள் ஒன்றிலும் வெளியேறிச் சென்றனர்.

நேற்றிரவு 7.20 அளவில் மட்டக்ககுளி சமிட்புர பிரதேசத்தின் திடீரென வெடிச்சத்தங்கள் கேட்டன.

இங்கு மேற்கொள்ளப்டப்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்டட போதிலும் அவர்களில் நால்வர் உயிரிழந்து காணப்பட்டனர்.

பாதாள உலக கோஷ்டியின் ஒரு உறுப்பினராக கருதப்படும் ரொநான் என்பவரின் வீட்டிற்கு முன்பாகவே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில முச்சக்கரவண்டிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ரி 56 ரக துப்பாக்கியின் 9 மில்லிமீற்றர் ரவைகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இரண்டு பாதாள உலக கோஷ்டியினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இரு குழுக்களுக்குமிடையிலான மோதல் ஆரம்பித்துள்ளதாக எமக்கு அறியக்கிடைத்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்