மட்டக்குளியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணை

மட்டக்குளியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணை

மட்டக்குளியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 10:58 am

நான்கு உயிர்களை காவு கொண்ட கொழும்பு – 15 மட்டக்குளி சமித்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்குளி சமிட்புர பகுதியில் நேற்றிரவு 7.30 அளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பாதாள உலகக் கோஷ்டியினரிடையே காணப்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமிட்புர பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் விளையாட சென்று திரும்பும் போது இந்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளனர்.

சமிட்புர பகுதியை சேர்ந்த மொஹம்மட் ஹுசைன் , மொஹம்மட் நசார் , நுவன் சஞ்ஜீவ மற்றும் பிரசாத் சதுரங்க பெரேரா ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் சந்திரசிகிச்சைக்கு உட்படுத்தடுப்பட்டுள்ளதாக தேசிய வைத்திய பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்