பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு சட்ட ரீதியான நிறுவனம் என நீதிமன்றம் அறிவிப்பு

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு சட்ட ரீதியான நிறுவனம் என நீதிமன்றம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 1:40 pm

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு சட்டத்திற்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்ட விசாரணைப் பணியகமாகும் என நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், வர்த்தமானியில் அறிவித்து நிதிக்குற்ற விசாரணைப் பிரிவை பொலிஸ் மாஅதிபர் ஸ்தாபித்துள்ளதாக கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவிற்கு எதிராக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு தாக்கல் செய்திருந்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை நிராகரித்த நீதவான் இதனை அறிவித்துள்ளார்.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு சட்ட அதிகாரம் இல்லை என சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்