தெற்கு கலிபோர்னியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் பலி

தெற்கு கலிபோர்னியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் பலி

தெற்கு கலிபோர்னியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 12:31 pm

தெற்கு கலிபோர்னியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பால்ம் ஸ்பிரிங்ஸ் பகுதியில் நேற்று காலை கனரக கொள்களன் வண்டியொன்றில் பின்னால் பஸ் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்தவர்களில் அநேகமானவர்கள் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணியாளர்கள் விபத்துக்குள்ளான பஸ்ஸிலிருந்து காமடைந்தவர்களை மீட்டுள்ளதுடன், இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்