தெற்காசியாவிலுள்ள ஏனைய நாடுகளை விட இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகும் வீதம் குறைவு

தெற்காசியாவிலுள்ள ஏனைய நாடுகளை விட இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகும் வீதம் குறைவு

தெற்காசியாவிலுள்ள ஏனைய நாடுகளை விட இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகும் வீதம் குறைவு

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 11:58 am

இலங்கையில் எச்.ஐ.வி /எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் செயற்பாடு 2016 ஆம் ஆண்டு முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நிதியத்தினூடாக எச்.ஐ.வி , எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா என்பனவற்றை நாட்டில் இல்லாதொழிப்பதற்கு வருடாந்தம் பாரிய நிதி ஒதுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் கண்டறிவதற்கு சர்வதேச நிதியத்தின் முகாமையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

தெற்காசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகும் வீதம் குறைவாக காணப்படுவதாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் எச்.ஐ.வி நோயாளர்கள் 180 பேர் பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்