கோப் குழுவின் இன்றைய கூட்டத்திலிருந்து சுனில் ஹந்துன்னெத்தி வெளியேறினார்

கோப் குழுவின் இன்றைய கூட்டத்திலிருந்து சுனில் ஹந்துன்னெத்தி வெளியேறினார்

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 6:31 pm

கோப் குழுவின் இன்றைய கூட்டத்திலிருந்து குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி வெளியேறிச் சென்றுள்ளார்.

முறிகள் விநியோகம் தொடர்பான தமது அறிக்கை தொடர்பில் இன்றைய கூட்டத்தின்போதும் கலந்துரையாடப்பட்டதாக சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.

இந்த அறிக்கைக்கு சிலர் முழுமையாக ஆதரவு தெரிவித்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரால் அதில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அந்த அறிக்கையில் கணக்காய்வாளர் நாயகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அழுத்தங்கள் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி கூறினார்.

எவ்வாறாயினும், கணக்காய்வாளர் நாயகத்தின் முடிவுகள் தொடர்பில் திருத்தங்கள் முன்வைக்க முடியும் எனவும் மாறாக அவற்றை மாற்றுவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதெனவும் தாம் வலியுறுத்தியதாக கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

ஆயினும் தொடர்ந்து விடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் தம்மால் கோப் குழுவின் தலைவராக தொடர்ந்தும் செயற்பட முடியாத நிலையில் அந்த குழுவிலிருந்து வெளியேறியதாக சுனில் ஹந்துன்னெத்தி மேலும் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்