கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக கிராம மக்களுடன் இணைந்த திட்டங்களே அவசியம்

கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக கிராம மக்களுடன் இணைந்த திட்டங்களே அவசியம்

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 8:04 pm

யாவருக்கும் நிழல் வீட்டுத் திட்டத்தின் 12 ஆவது கிராமம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

பொலன்னறுவை, திம்புலாகல 19ஆம் கால்வாய் பகுதி மாதிரி கிராமம் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவிற்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

25 வீடுகளைக் கொண்ட இந்த மாதிரிக் கிராமத்திற்கு மறைந்த திம்புலாகல சிறி சீலாலங்கார தேரரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு வீடுகளை கையளிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டதுடன், மூக்குக் கண்ணாடி, உலர் உணவுப் பொருட்களும் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீட்டு உதவிகளும், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட 53 பேருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா வீதமும் உதவிகள் வழங்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்