இறங்கு துறை மக்களின் அடிப்படை சுகாதார வசதி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த மக்கள் சக்தி

இறங்கு துறை மக்களின் அடிப்படை சுகாதார வசதி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த மக்கள் சக்தி

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 8:18 pm

மக்களின் இன்னல்களை தேடி அறிந்து அதற்கான தீர்வினை வழங்கும் நியூஸ்பெஸ்ட்டின் மக்கள் சக்தி 100 நாட்கள் திடடத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு மனித நேய செயற்றிட்டம் இன்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

தலைமன்னார் இறங்கு துறையில் அடிப்படை சுகாதார வசதிகளை பூர்த்திசெய்யும் பொருட்டு நிர்மாணிக்கபட்டுள்ள பொது மலசல கூடங்கள் இன்று மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன

சமயதலைவர்களின் ஆசீர்வாதத்துடன் இன்று காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை மேம்படுத்துவதற்காக புத்தகங்களும் வழங்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்