2016 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கும் விழா இன்று

2016 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கும் விழா இன்று

2016 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கும் விழா இன்று

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 11:48 am

2016 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கும் விழாவை முன்னிட்டு கண்டி மாநகரில் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

நியூஸ் பெஸ்ட்டின் ஊடக அனுசரனையுடன் கல்வி அமைச்சினூடாக நடாத்தப்படும் இந்த நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை வழங்குகின்றார் அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் இராஜேந்திரன் கோகுல்நாத்

கண்டி தர்மராஜ கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது தமிழ் மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவதுடன் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்