விஷாலுக்கு வில்லனாகும் ஆர்யா

விஷாலுக்கு வில்லனாகும் ஆர்யா

விஷாலுக்கு வில்லனாகும் ஆர்யா

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 4:32 pm

புதுமுக இயக்குனர் மித்ரன் இயக்கி வரும் ‘இரும்புத்திரை’ படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விஷால், சமந்தா நாயகியாக நடித்துவரும் இப்படத்துக்கு ‘இரும்புத்திரை’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

விஷால் நாயகனாக நடித்து, தயாரிக்கின்றார் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் வில்லனாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறது படக்குழு.

இக்கதையைக் கேட்டவுடன் இதற்கு ஆர்யா சரியாக இருப்பார் என விஷாலே பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

தமிழில் ஆர்யா வில்லனாக நடிக்கும் முதல் படமாக ‘இரும்புத்திரை’ அமையவுள்ளது.

‘கடம்பன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பெங்கொக்கில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது, அதனை முடித்துவிட்டு, ‘இரும்புத்திரை’யில் கவனம் செலுத்தவிருக்கிறார் ஆர்யா.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்