யாழ். பல்கலைக்கழக மாணவன் நடராசா கஜனின் பூதவுடல் நல்லடக்கம்

யாழ். பல்கலைக்கழக மாணவன் நடராசா கஜனின் பூதவுடல் நல்லடக்கம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 8:27 pm

யாழ். பல்கலைக்கழக மாணவன் நடராசா கஜனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன.

யாழ். காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்களான நடராசா கஜன் மற்றும் பவுண்ராஜ் சுலக்ஷ்ன் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவன் நடராசா கஜனின் பூதவுடல் கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள், அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுக்கள் என பெருமளவானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றைய மாணவன் பவுண்ராஜ் சுலக்ஷ்னின் பூதவுடல் யாழ் – கந்தரோடையிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் பெருந்திரளானவர்கள் மாணவனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்