மக்கள் சக்தி : பொலன்னறுவை சிங்கபுர குடிநீர் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பு

மக்கள் சக்தி : பொலன்னறுவை சிங்கபுர குடிநீர் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 6:27 pm

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொலன்னறுவை சிங்கபுர குடிநீர் திட்டம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்ட்டது.

பொலன்னறுவை, சிங்கபுர மற்றும் அதனை அண்மித்த பகுதி மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இவ்வாறு பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு, மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் மூலம் இன்று சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு விசேட வைத்திய நிபுணர் பிரகாஷ் பிரயதர்ஷன் மற்றும் எச்.ஏ.யு ஆயுவர்தன ஆகியோர் இதற்கு நிதியுதவி வழங்கியிருந்தனர்.

அத்துடன் சிங்கபுர கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்களுக்கும் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

சச்சினி டயஸ் மற்றும் இந்திரானி டயஸ் ஆகியோர் இதற்கான நிதியுதவி வழங்கியிருந்தனர்.

கெமுனு விகாரையின் கட்டடம் ஒன்றின் நிர்மாணப்பணிகளும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் நடப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்