சுன்னாகம் பகுதியில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் மீது தாக்குதல்

சுன்னாகம் பகுதியில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் மீது தாக்குதல்

சுன்னாகம் பகுதியில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 7:25 pm

யாழ். சுன்னாகம் பகுதியில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் மீது, இன்று (23) பகல் அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களுக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பாக வடக்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் வினவிய போது அடையாளம் தெரியாத சிலர் சுன்னாகம் சந்தியிலுள்ள கடையொன்றில் கொள்ளையிட்டு குறித்த இருவரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறினார்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சிறீபவானந்தராஜா குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்