சவூதியிலுள்ள இலங்கை பணியாளர்களுக்கு தொழில் ரீதியில் எவ்வித நெருக்கடிகளும் ஏற்படவில்லை

சவூதியிலுள்ள இலங்கை பணியாளர்களுக்கு தொழில் ரீதியில் எவ்வித நெருக்கடிகளும் ஏற்படவில்லை

சவூதியிலுள்ள இலங்கை பணியாளர்களுக்கு தொழில் ரீதியில் எவ்வித நெருக்கடிகளும் ஏற்படவில்லை

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 12:24 pm

சவூதியில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் இலங்கை பணியாளர்களுக்கு தொழில் ரீதியில் எவ்வித நெருக்கடிகளும் ஏற்படவில்லை என வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

சவூதியில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கு ஏதேனும் நெருக்கடிகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதற்கமைய பொருளாதார ரீதியில் இலங்கை பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனின் நாளொன்றுக்கான செலவிற்காக தலா 50 டொலர் ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தொழில் இல்லாது போகும் பட்சத்தில் அவர்களை நாட்டிற்கு மீள வரவழைப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சவூதியிலுள்ள இலங்கை பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான நிதி, அங்குள்ள தூதரகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சவூதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கை பணியாளர்களுக்கு பாரிய அளவில் இதுவரை எவ்வித நெருக்கடிகளும் ஏற்படவில்லை என வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்