ஒளடதங்களின் விலை குறைப்பிற்கான பயனை நாளை முதல் மக்களுக்கு வழங்குமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனை

ஒளடதங்களின் விலை குறைப்பிற்கான பயனை நாளை முதல் மக்களுக்கு வழங்குமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனை

ஒளடதங்களின் விலை குறைப்பிற்கான பயனை நாளை முதல் மக்களுக்கு வழங்குமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 5:02 pm

48 வகையான ஒளடதங்களின் விலை குறைப்பிற்கான பயனை நாளை முதல் மக்களுக்கு வழங்குமாறு சுகாதார அமைச்சர் டொக்கர் ராஜித சேனாரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரச ஔடதங்கள் கூட்டுதாபனத்திற்கே அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் காணப்படும் 32 அரச ஔடதங்கள் கூட்டுத்தாபன ஒசுசல மருந்தகங்களிலும், 130 முகவர் ஒசுசல மருந்தகங்களிலும் குறைந்த விலையில் ஒளடதங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை, குறைக்கப்பட்ட விலைக்கு ஏற்ப ஔடதங்களை விற்பனை செய்யாத ஒசுசல தொடர்பில் சுற்றிவளைப்புகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம பெரேராவிற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவு, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் உணவு பரிசோதனை அதிகாரிகளின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனிடையே ஒளடதங்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தேவையான அளவு ஔடதங்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திக் கொள்ளுமாறு அரச ஔடதங்கள் கூட்டுதாபனத்திற்கு சுகாதார அமைச்சர் அறிவுருத்தல் விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்