இந்திய வெளிவிவகார செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 2:16 pm

நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று (22) நாட்டை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார செயலாளர் நாளை (24) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்