இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மீது வழக்குத் தாக்கல்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மீது வழக்குத் தாக்கல்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மீது வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 6:15 pm

இந்தியாவின் தனுஷ்கோடி கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனுஷ்கோடிக்கு 09 கிலோமீற்றர் கடல்மைல் தொலைவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் படகொன்றும் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட 8 வலைகளும், படகில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரமொன்றும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

தலைமன்னார் ஊடாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கு சென்றவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்