அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கல் விழா ஜனாதிபதி தலைமையில்

அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கல் விழா ஜனாதிபதி தலைமையில்

அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கல் விழா ஜனாதிபதி தலைமையில்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 6:56 pm

அகில இலங்கை தமிழ் மொழி தின விழாவின், விருது வழங்கல் நிகழ்வு, ஜனாதிபதியின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு நியூஸ்பெஸ்ட் ஊடக அனுசரணை வழங்கியிருந்தது.

அகில இலங்கை தமிழ் மொழி தின விழாவின், விருது வழங்கல் நிகழ்வின் வரவேற்பு ஊர்வலம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டி திரித்துவ கல்லூரி முன்பாக ஆரம்பமானது

விருது வழங்கல் நிகழ்வு, கண்டி தர்மராஜ கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட தமிழ் திறன்காண் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்தார்.

திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னம் என்பன இதன்போது வழங்கப்பட்டன.

இம்முறை அகில இலங்கை தமிழ் மொழி தின விழாவை முன்னிட்டு ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.

அகில இலங்கை தமிழ் மொழி தின விழாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்