முறிகள் கொடுக்கல் வாங்கலுக்கு அர்ஜூன் மகேந்திரன் பொறுப்புக்கூற வேண்டும் – தி ஐலன்ட் பத்திரிகை செய்தி

முறிகள் கொடுக்கல் வாங்கலுக்கு அர்ஜூன் மகேந்திரன் பொறுப்புக்கூற வேண்டும் – தி ஐலன்ட் பத்திரிகை செய்தி

முறிகள் கொடுக்கல் வாங்கலுக்கு அர்ஜூன் மகேந்திரன் பொறுப்புக்கூற வேண்டும் – தி ஐலன்ட் பத்திரிகை செய்தி

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2016 | 10:37 pm

முறிகள் கொடுக்கல் வாங்கலுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் பொறுப்புக்கூற வேண்டும் என கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஐலன்ட் (THE ISLAND) பத்திரிகை இன்று தலைப்புச்செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் கலந்துரையாடப்பட்ட கோப் குழுவின் அறிக்கை தொடர்பான தகவல்களை சேகரித்து தி ஐலன்ட் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கோப் குழுவில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் தற்போதைய நிலை தொடர்பில், மேலும் சில பத்திரிகைகளிலும் இன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

நல்லாட்சியிலுள்ள அமைச்சர்கள் தொடர்ந்தும் அவர்களின் நபரைப் பாதுகாப்பதற்கு முயற்சிப்பதாக தி ஐலன்ட் பத்திரிகை தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மற்றுமொரு இடைக்கால அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்