மலேசியாவில் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்துச் சிதறியதில் 31 பேர் படுகாயம்

மலேசியாவில் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்துச் சிதறியதில் 31 பேர் படுகாயம்

மலேசியாவில் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்துச் சிதறியதில் 31 பேர் படுகாயம்

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2016 | 4:11 pm

மலேசியாவில் தொண்டு நிறுவனமொன்று நடத்திய நிகழ்ச்சியில், வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்துச் சிதறியதில் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மலேசியாவின் டெரெங்கனு மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில், ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் காற்றில் பறக்க விடப்படுவதற்கு முன் அதனைக் காண கூட்டம் கூடியிருந்தது.

அதைப் பறக்கவிடும் முயற்சியில், நிலத்தோடு கட்டப்பட்டிருந்த பலூன்களின் சரங்களை அதிகாரி ஒருவர் சிகரட் லைட்டர் மூலம் தீ வைக்க, அது மிகப்பெரிய தீ பிழம்பாக வெடித்துச் சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 150 க்கும் மேற்பட்ட பலூன்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியுள்ளன.

இதனால், பார்வையாளர்கள் பலருக்கும் முகங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, வாயு நிரப்பப்பட்ட பலூன்களுக்கு டெரங்கனு மாநில அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்