பெர்முடா முக்கோணத்தின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது

பெர்முடா முக்கோணத்தின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது

பெர்முடா முக்கோணத்தின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2016 | 4:37 pm

அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பை பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) என்கின்றனர்.

புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்றையும் ஓர் முக்கோணம் போல் இணைக்கும் கடல் பகுதியாகத் திகழ்கிறது இந்த பெர்முடா.

இந்த கடற்பகுதி 5 இலட்சம் கிலோமீட்டர் சதுர அடி பரப்பளவு கொண்டது.

இந்த முக்கோணக் கடற்பகுதியில் எண்ணற்ற கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மறைந்து போயுள்ளன. ஆனால், இது குறித்த உண்மை நிலவரம் எவருக்கும் தெரியாததால், பலவிதமான கதைகள் உலவ ஆரம்பித்தன.

சிலர் இது வேற்றுக்கிரகவாசிகளின் சூழ்ச்சி எனவும் நம்பினர். இதை பேய் முக்கோணம் என்று லத்தீன் அமெரிக்காவில் அழைக்க ஆரம்பித்தார்கள்.

இதற்கிடையில், மெக்ஸிக்கோவின் 19 விமானங்கள் காணாமற்போயின. அந்த விமானங்களைத் தேடி மீட்புப் பணிக்காகச் சென்ற 13 பேர் கொண்ட குழுவும் காணாமற்போனது.

இதற்கான காரணங்களைப் பல காலமாகவே ஆராய்ச்சியாளர்கள் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், 2012 ஆம் ஆண்டு பெர்முடா கடலின் ஆழத்தில் புதிரானதொரு அமைப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இது குறித்து ஆய்வு நடத்தி வந்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக இருந்து வந்த மர்ம முடிச்சை தற்போது அவிழ்த்துள்ளனர்.

இந்த பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அங்கு நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து கொலராடோ பல்கலைக்கழகத்தின் வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் ஸ்டீவ் மில்லர் கூறுகையில், “பொதுவாக நேரான விளிம்புகள் கொண்ட மேகங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பெரும்பாலான நேரம் மேகங்கள் சீரற்ற நிலையில் பரவி இருக்கும். ரேடார் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி மேகங்களுக்கு கீழ் என்ன நடக்கிறது என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோ மீட்டர் வேகத்தில் செயற்படும் காற்று, வெடிகுண்டுகள் (Air bombs) போல் கடல் மட்டத்தில் இருந்து மேல் எழும்பி மீண்டும் கடலை நோக்கி கீழே விழுகிறது. இந்த காற்று வெடிகுண்டுகளால்தான் அப்பகுதியில் கப்பல்கள், விமானங்கள் போன்றவை மர்மமான முறையில் மறைந்திருக்கும்.”

என குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்