பெய்ஜிங்கில் 2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ரோபோ மாநாடு

பெய்ஜிங்கில் 2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ரோபோ மாநாடு

பெய்ஜிங்கில் 2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ரோபோ மாநாடு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2016 | 2:15 pm

2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ரோபோ மாநாடு பெய்ஜிங்கில் இடம்பெற்றது

இந்த மாநாட்டின் முக்கிய அங்கத்தவர்களாக உலகின் தொழில்நுட்ப மேம்பாட்டு நாடுகளான அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியன கலந்து கொண்டுள்ளன.

குகா ரெத்திங் ரெபோட்டிக்ஸ் மற்றும் சீன சின் சோங் ஆகிய ரோபோக்கள் இந்த மாநாட்டில் முக்கிய இடம்வகிக்கின்றன.

ரோபா மாநாடு பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பெருமளவிலானவர்கள் ரோபோ கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.

மிகவும் பிந்திய தொழில்நுட்பங்களுடன் கூடிய ரோபாக்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துக்காட்டும் விடயதானங்களும் இந்த மாநாட்டில் உள்ளடங்கியுள்ளன.

மனித இயக்கங்களை ஒத்த ரோபோக்கள் இந்த மாநாட்டில் பேசும் பொருளாகியுள்ளதுடன் பலரையும் கவர்ந்துள்ளது.

மேலும் பெட்மின்டன் விளையாட்டில் ஈடுபடும் ரோபோக்கள் பலராலும் விரும்பி பார்க்கப்பட்டது.

இங்கு நடைபெறும் ரோபா கண்காட்சியில் 10 நாடுகளைச் சேர்ந்த 500 குழுக்கள் உள்ளடங்கியுள்ளன.

காற்பந்து , நீர்விளையாட்டுக்கள் மற்றும் செயற்பாடுகள் உள்ளடங்கலாக 6 பிரிவுகளில் ரோபோக்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்