புத்த துறவியின் ‘மம்மி’ தங்கச் சிலையானது (Photos)

புத்த துறவியின் ‘மம்மி’ தங்கச் சிலையானது (Photos)

புத்த துறவியின் ‘மம்மி’ தங்கச் சிலையானது (Photos)

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2016 | 5:24 pm

சீனாவின் குஹான்சூ நகரில் சாங்க் பூ என்ற புத்த விஹாரை அமைந்துள்ளது.

அங்கு பூஹூ என்ற புத்த மதத் துறவி தன்னுடைய 94 வயது வரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, கடந்த 2012 ஆம் ஆண்டில் காலமானார்.

அவர் புத்த மதத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவிக்கும் விதமாக, ஒரு மிகப்பெரிய விஷயத்தை செய்ய குறித்த விஹாரையின் நிர்வாகம் முடிவெடுத்தது.

அதன்படி, அவர் இறந்து நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரின் சடலத்தைப் பதப்படுத்தினர்.

பின்னர், அதை பெரிய ஜாடியில் உட்காரும் நிலையில் வைத்து மூடிவைத்தனர்.

அதற்கு தங்க முலாம் பூசி, ஒரு தங்க சிலையாக தற்போது வடிவமைத்துள்ளனர்.

 

china-mummified-monk_wake2-1024x683

monk2

mummified-monk_wake-1024x719


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்