பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: கைதான பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில்

பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: கைதான பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில்

பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: கைதான பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2016 | 11:17 am

யாழ். காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று (22) யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்