உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள்

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள்

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2016 | 10:26 am

யாழ். காங்கேசன்துறையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவர் ஒருவரின் சடலத்தில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கொக்குவில் பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர்களின் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து – சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கொக்குவில் – குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பதிவாகியது.

இந்த விடயம் தொடர்பில் வினவிய போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று மதில் மீது மோதி ஏற்பட்ட விபத்திலேயே இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் இரு இளைஞர்கள் உயிரிழந்தமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்