”நெருப்புடா” பாடலுடன் மீண்டும் காமெடியனாக அறிமுகமாகிறார் வடிவேலு

”நெருப்புடா” பாடலுடன் மீண்டும் காமெடியனாக அறிமுகமாகிறார் வடிவேலு

”நெருப்புடா” பாடலுடன் மீண்டும் காமெடியனாக அறிமுகமாகிறார் வடிவேலு

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2016 | 5:00 pm

கத்தி சண்டை படத்தில் ‘நெருப்புடா’ பாடல் பின்னணியில் வடிவேலு அறிமுகமாவது போன்று காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சுராஜ்.

விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கத்தி சண்டை’.

சுராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். நந்தகோபால் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 18 ஆம் திகதி இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.

நாயகனாக மட்டுமே நடித்து வந்த வடிவேலு, இப்படத்தின் மூலம் மீண்டும் காமெடியன் வேடத்திற்கு திரும்பியிருக்கிறார்.

சுராஜ் – வடிவேலு கூட்டணி படங்களான ‘மருதமலை’ மற்றும் ‘தலைநகரம்’ ஆகியவற்றின் காமெடிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவை.

இப்படத்தில் மனநல மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு.

இப்படத்தில் வடிவேலு அறிமுகமாகும் காட்சியின் பின்னணியில் ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடல் இடம்பெற்றிருக்கிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்