கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடமாற்றம்

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடமாற்றம்

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2016 | 2:01 pm

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிகமாக புத்தளம் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற மீனவர் ஆர்ப்பாட்டத்தின் போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்தே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோதலினால் 6 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரண்டு வாகனங்களை தீக்கிரையாக்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு வலைகளை பயன்படுத்தும் மீனவர்களால் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு மற்றுமொரு மீனவக் குழுவினர் வந்ததை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்