மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் –  மஹிந்த அமரவீர

மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – மஹிந்த அமரவீர

மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2016 | 8:16 am

தமது கோரிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் பேச்சவார்த்தை நடத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாக கந்தகுளி மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு மீனவர் கிராம மண்டபத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தமக்கு அழைப்பு விடுத்திருந்ததாக மீனவர் சங்கத்தின் தலைவர் நொயல் பெர்ணான்டோ தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த பகுதிக்கு செல்வதற்கு தாமதம் நிலவியதால் அமைச்சர் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு வலைகளை பயன்படுத்தும் மீனவர்களால் கடந்த 2 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு மீனவக்குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்ததுடன், அவர்கள் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்