அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கும் விழாவிற்கான ஆயத்தப் பணிகள் மும்முரம்

அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கும் விழாவிற்கான ஆயத்தப் பணிகள் மும்முரம்

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2016 | 8:17 pm

நாளை (23) இடம்பெறவுள்ள அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கும் விழாவிற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை தமிழ் மொழி தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கான விருது வழங்கும் விழா நாளை காலை 10 மணிக்கு கண்டி தர்மராஜா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவதுடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஆயத்தப் பணிகள் இன்றைய தினம் இடம்பெற்றன.

இந்த விழாவிற்கான ஊடக அனுசரணையை நியூஸ்பெஸ்ட் வழங்குகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்