2017 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர் நவம்பர் மாதம் முதல் விநியோகம்

2017 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர் நவம்பர் மாதம் முதல் விநியோகம்

2017 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர் நவம்பர் மாதம் முதல் விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 11:55 am

2017 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கொடுப்பனவு 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் வவுச்சர்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிர்வாக அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் அதிபர்களுக்கு இடையில் எவ்வித சிக்கலும் ஏற்படாதவாறு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.