தில்ருக்ஷி மீண்டும் சொலிஸிட்டர் நாயகமாக பொறுப்பேற்பு: சுநேத்ரா ஆணைக்குழுவின் பணிப்பாளரானார்

தில்ருக்ஷி மீண்டும் சொலிஸிட்டர் நாயகமாக பொறுப்பேற்பு: சுநேத்ரா ஆணைக்குழுவின் பணிப்பாளரானார்

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 9:59 pm

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து இராஜினாமா செய்த தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, மேலதிக சொலிஸிட்டர் நாயகமாக இன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து இராஜினாமா செய்த தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க அனுப்பிய இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி நேற்று ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, ஆணைக்குழுவி்ன் பிரதி பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட சுநேத்ரா ஜயசிங்க, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியான தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க ஏற்கனவே சேவையாற்றிய, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் நாயகம் பதவிக்கான பொறுப்புகளை இன்று மீண்டும் ஆரம்பித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்