2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 10:06 pm

2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.

ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, 2017 ஆம் ஆண்டுக்கான செலவு 1819.5 பில்லியன் ரூபா என அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.

அதில் 1208 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்திற்கான பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக 284 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்விக்காக 77 பில்லியனும், உயர் கல்விக்காக 163 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இரண்டாம் முறை வாசிப்பிற்கான வாக்கெடுப்பு நவம்பர் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மூன்றாம் முறை வாசிப்பு மற்றும் வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்