18 ஆவது அகவையில் காலடி பதித்துள்ள சக்தி தொலைக்காட்சி

18 ஆவது அகவையில் காலடி பதித்துள்ள சக்தி தொலைக்காட்சி

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 2:47 pm

சக்தி தொலைக்காட்சி இன்று 18 ஆவது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றது.

என்றும் புதுமைகளைப் படைக்கும் சக்தி தொலைக்காட்சியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தெபானம கலையகத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் இலத்திரனியல் ஊடக வர்த்தகக் குழுமப் பணிப்பாளர் நீட்ரா வீரசிங்க, குழுமப் பணிப்பாளர் ஶ்ரீலால் அகங்கம, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.ஶ்ரீரங்கா, சக்தி தொலைக்காட்சி அலைவரிசைப் பிரதானி மற்றும் தெபானம கலையக பணிப்பாளர் அசோக்க டயஸ் உட்பட ஏனைய அலைவரிசைப் பிரதானிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு இசை நிகழ்ச்சிகளும் கலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்