முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டடம் அமைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டடம் அமைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டடம் அமைக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2016 | 10:49 am

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நீதிமன்ற கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிபதியாக கடமையாற்றியபோது மேற்கொண்டிருந்த முயற்சியின் பயனாக நீதியமைச்சினால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான இடஒதுக்கீடு தொடர்பாக மாவட்ட அரச அதிபரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் தற்போது 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் பிரதிபலனாக மாங்குளத்திலும் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நீதியமைச்சு மேற்கொண்டு வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்