மனைவியின் மேக்கப் இல்லா முகத்தைப் பார்த்து அதிர்ந்து விவாகரத்துப் பெற்ற கணவர்

மனைவியின் மேக்கப் இல்லா முகத்தைப் பார்த்து அதிர்ந்து விவாகரத்துப் பெற்ற கணவர்

மனைவியின் மேக்கப் இல்லா முகத்தைப் பார்த்து அதிர்ந்து விவாகரத்துப் பெற்ற கணவர்

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 6:44 pm

திருமணமான புதிதில் கடலில் நீந்தச்சென்ற போது, தனது மனைவியை மேக்கப் (ஒப்பனை) இல்லாமல் பார்த்து அதிர்ந்து போன கணவர், நீதிமன்றத்தை நாடி விவாகரத்துப் பெற்றுள்ளார்.

துபாயைச் சேர்ந்த 34 வயது நபர், 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அவர் ஷார்ஜாவில் உள்ள அல் மம்ஸார் கடற்கரையில் நீந்தச் சென்றபோது, அவரது மனைவியின் முழு ஒப்பனையும் கலைந்து, அவர் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போயிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.

உடனடியாக நீதிமன்றத்தில் விவகாரத்துக் கோரிப் பெற்றுவிட்டார்.

மணப்பெண் அளவுக்கு அதிகமாக மேக்கப்பில் இருந்துள்ளார். அவரது கண் இமைகள் கூட உண்மையில்லை. அவையும் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அழகுக்காக பல அறுவை சிகிச்சைகளையும் அவர் செய்துள்ளார், என்று கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்