மத்திய வங்கி முறிகள் விநியோகம் குறித்த கோப் அறிக்கை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில்

மத்திய வங்கி முறிகள் விநியோகம் குறித்த கோப் அறிக்கை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில்

மத்திய வங்கி முறிகள் விநியோகம் குறித்த கோப் அறிக்கை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2016 | 10:17 am

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது.

கோப் குழு, பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் கூடி இது தொடர்பில் ஆராயவுள்ளதாக கணக்காய்வாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது.

முறிகள் விநியோகம் தொடர்பான விசாரணை அறிக்கை நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கை கோப் குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் அதுகுறித்து கருத்துகள் கேட்டறியப்படவுள்ளன.

இதனையடுத்து, மத்திய வங்கியின் முறிகள் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்