புத்தளம் ஆண்டிமுனை மகாவித்தியாலயத்தில் நியூஸ்பெஸ்ட்டின் பயிற்சிப்பட்டறை

புத்தளம் ஆண்டிமுனை மகாவித்தியாலயத்தில் நியூஸ்பெஸ்ட்டின் பயிற்சிப்பட்டறை

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 7:06 pm

செய்தி அறிக்கையிடலுக்கு அப்பாற்சென்று எதிர்கால சந்ததியினருக்கு ஊடகம்சார் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில், நியூஸ்பெஸ்டினால் முன்னெடுக்கப்படும், பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் மற்றுமொரு கட்டம் இன்று புத்தளத்தில் நடைபெற்றது.

புத்தளம் ஆண்டிமுனை மகாவித்தியாலயத்தில் இன்று நியூஸ்பெஸ்ட்டின் பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, செய்தி அறிக்கையிடல், செய்தி வாசிப்பு, நவீன ஊடக பயன்பாடு, செய்தியறையின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தலைமைத்துவப் பயிற்சியும் இதன்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அதில் பங்குபற்றினர்.

மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் இதன்போது சந்தர்ப்பமளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்