புதுமனைப் புகுவிழாவிற்குத் தயாராகி வரும் மீரியபெத்த மக்கள்

புதுமனைப் புகுவிழாவிற்குத் தயாராகி வரும் மீரியபெத்த மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 8:52 pm

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தை – மீரியபெத்த மக்கள் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மகிழ்வான வாழ்விற்குத் திரும்பவுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மீரியபெத்தயில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் என எவரும் அறிந்திருக்கவில்லை.

மண் சரிவினால் உறவுகள், உடைமைகளை இழந்த நிலையில், கொஸ்லந்தை – மீரியபெத்த மக்கள் பூணாகலை, மாக்கந்தை தேயிலைத் தொழிற்சாலையில் தஞ்சம் புகுந்தனர்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இம்மக்களுக்கு மாற்றிடத்தில் வீடுகள் நிர்மாணித்துத் தருவதாக பலதரப்பினரும் வாக்குறுதியளித்த போதிலும், இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர்.

மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹல்துமுல்லை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூணாகலை – மகுல்தெனிய பகுதியில் 75 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

புதிதாகக் கிடைக்கப்பெற்ற வீட்டினை சுத்தம் செய்து புதுமனைப் புகுவிழாவிற்குத் தயாராகி வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்