புணானை இராணுவ முகாமிற்குள் நுழைந்த காட்டு யானை: இராணுவ வீரர் உயிரிழப்பு

புணானை இராணுவ முகாமிற்குள் நுழைந்த காட்டு யானை: இராணுவ வீரர் உயிரிழப்பு

புணானை இராணுவ முகாமிற்குள் நுழைந்த காட்டு யானை: இராணுவ வீரர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 6:54 pm

மட்டக்களப்பு – புணானை இராணுவ முகாமிற்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை இராணுவ முகாமில் நேற்று கடமையிலிருந்த இராணுவ வீரரொருவரே யானை தாக்கத்திற்குள்ளானார்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயது இராணுவ சிப்பாய் ஒருவரே சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வெலிகந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்